உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன். குடாநாட்டுக்கு வருகை தந்த அவர் இங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இன்று காலை 9 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கூடத்தை அவர் திறந்துவைத்தார்.

376

image_handle (1) image_handle (2) image_handle (3) image_handle (4) image_handle (5) image_handle

முன்னதாக பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்ட விருந்தினர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர். பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்தையும் கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் இன்று திறந்துவைத்தார்.

இன்று நண்பகல் 11 மணியளவில் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

SHARE