இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும்

409
262950_109246592566105_670587300_n

அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேரணை கொண்டுவர அதனை பவ்வியமாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, அதன் இராணுவம் இழைத்த போர்குற்றங்கள் உலகிற்குத் தெரியாது என்று எண்ணிவருகிறது. குறிப்பாக இந்திய அரசின் ஜனநாயக அடக்குமுறைகளை மேற்குலக நாடுகள் கண்டுகொள்வதே இல்லை. இந்தியா ஒரு பெரும் ஜனநாயக நாடு என்ற போர்வைக்குள் வைத்திருக்கவே அது விரும்புகிறது. இந்தியாவின் வளர்ச்சியும் ஏற்றுமதியையும் அவர்கள் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை ! இந்திய அரசு ஆயுதம் ஏந்தாத நக்ஸல் போராளிகள் மீது நடத்தும் தாக்குதல்கள், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது நடத்தும் தாக்குதல்கள் என்ப பற்றி அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகள் நன்கு அறிந்துவைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் இதுகுறித்து பேசுவதே இல்லை. இங்கே நீங்கள் பார்ப்பது ஈழத்தில் இந்திய இராணுவத்தின் கொடுமை என்று நினைத்துவிடவேண்டாம். இது சாட்சாத் இந்திய இராணுவம் தான், ஆனால் தன் மக்கள் மீதே இவ்வாறு நடந்துகொள்கின்றனர். Posted Image Posted Image இந்திய இராணுவத்தின் சித்திரவதைகள் – வீடியோ 

ந்தியன் ஆமி அமைதிப்படை என்ற பெயரில் ஈழமண்ணில் வந்து செய்த அட்டகாசங்கள் உலகறியும். கொலைகள், பாலியல் வல்லுறவுக்கள், சித்திரவதைகள் என்று செயற்பாடுகளாக ஒருகாலத்தில் அவை இருந்தன  அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன் ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே இவை…

Posted Image

இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால் தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. குறித்த காட்சிகள் அடங்கிய Youtube வீடியோவுக்குக் கீழ் வாசகர் ஒருவர் எழுதிய கருத்து அனைவரையும் யோசிக்க வைப்பதாக உள்ளது. அந்தக் கருத்து அப்படியே வாசகர்களுக்காக, “பாரத தேசத்து தமிழ் நாட்டு மக்களிற்கு… முதலில் உங்களை சுற்றியும் சுத்தம் செய்யவும்… அதன் பிறகு அண்டைய நாட்டிற்காக கருப்பு கொடி பிடிப்பதும், நடிகர் நடிகைகளுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதும், தீ குளிப்பதும் சிறந்தது.” உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து, வறுமையும் பட்டினியும் பீடித்து, தீராத அவலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, காங்கோ. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அந்நாட்டின் வடமேற்கே மாசிசி நகரிலுள்ள நிவாரண முகாம்களில் பஞ்சைப் பாராரிகளான கருப்பின மக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அணி வகுத்து சீறிக்கொண்டு வந்தன. நீலநிற இரும்புத் தொப்பி அணிந்த ஐ.நா. மன்றத்தின் அமைதிப்படை சிப்பாய்கள், ரொட்டி, பால், முட்டை முதலான உணவுப் பொருட்களுடன் வந்திறங்கி, அம்மக்களுக்கு விநியோகித்தனர். சிறிதுநேரத்தில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பலநாட்களாகப் பட்டினி கிடக்கும் பலர், உணவுக்காக அச்சிப்பாய்களிடம் கெஞ்சிக் கதறினர். கைக்குழந்தைகளுடன் கதறும் தாய்மார்களைப் பார்த்ததும் அமைதிப்படை சிப்பாய்களுக்கு வக்கிரமான “கருணை’ பிறந்தது. “ரொட்டியும் பாலும் முட்டையும் வேண்டுமா? தருகிறோம். அதற்கு நீங்கள் எங்களுடன் படுக்கைக்கு வரவேண்டும். சம்மதமா?” என்று கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தனர் அச்சிப்பாய்கள். வேதனையும் வெறுப்பும் கொப்பளிக்க, பட்டினியில் பரிதவிக்கும் கருப்பினத் தாய்மார்கள் அங்கிருந்து வெளியேறினர். பசியை ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். பாலியல் இச்சைக்கு இணங்காவிடில் ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்காது என்றால், அப்பெண்கள் என்ன செய்ய முடியும்? அகதிகளாக உழலும் அவர்களின் பட்டினியைச் சாதகமாக்கி கொண்டு, காங்கோ பழங்குடியினப் பெண்களைச் சூறையாடியது, அமைதிப்படை. வயிற்றுப் பசி தீர்க்க இராணுவக் கும்பலின் காமவெறிக்குப் பலியாக வேண்டும்; இல்லையேல் பட்டினிக்குப் பலியாக வேண்டும் என்ற அவலத்தில் காங்கோ தாய்மார்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக நிவாரண முகாம்களில் அல்லற்படும் இளம் பெண்களை அனுபவித்த இக்காமவெறி இராணுவப் படைகள், அடுத்ததாக பருவமடையா இளஞ் சிறுமிகளை பாலுக்கும் ரொட்டிக்கும் விலைபேசியது. பணியாத சிறுமிகளைக் கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்முறையை ஏவி, வீதியில் வீசியெறிந்தது. அதன் காமவெறி பயங்கரவாத வக்கிர வெறியாட்டம் இத்துடன் முடிந்து விடவில்லை. இளம் சிறுவர்களைக் கூடப் பிடித்துச் சென்று ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டது. அகதிகளாக வறுமையில் உழலும் மக்கள் மீது இப்படியொரு காமவெறி பயங்கரவாத அடக்குமுறையை ஏவியிருப்பது, காட்டுமிராண்டி அமெரிக்கப் படைகளல்ல. கண்ணியமும் வீரமும் பெருமையும் பாரம்பரியமும் மிக்கதாகச் சித்தரிக்கப்படும் இந்திய இராணுவம்தான் இந்த அட்டூழியங்களை செய்துள்ளது. உள்நாட்டில் காஷ்மீரிலும், மணிப்பூரிலும் தனது காமவெறி பயங்கரவாத வெறியாட்டங்களால் நாறிப் போயுள்ள இந்திய இராணுவம், இப்போது காங்கோ நாட்டில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் “அமைதிப்படை’ என்ற பெயரில் சென்று, அங்கேயும் கொட்டமடித்து உலகெங்கும் அம்பலப்பட்டு காறி உமிழப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் 1998 முதல் 2003 வரை இனக் குழுக்களுக்கிடையே உள்நாட்டுப் போர் மூண்டு இரத்த ஆறு ஓடியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப் பெரியதும் மிகக் கொடூரமானதுமான மனிதப் படுகொலை என்று கருதப்படும் இந்த இனக்குழுப் போரில், பல லட்சம் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக எல்லைப் பகுதிகளில் குவிந்தனர். போரைத் தடுத்து அமைதியையும் ஜனநாயகத்தையும் நல்வாழ்வையும் நிலைநாட்டுவது என்ற பெயரில் ஐ.நா மன்றத்தின் சார்பில், ஏகாதிபத்திய மேலாதிக்கக் கூலிப் படைகள் “அமைதிப் படை’ என்ற போர்வையில் காங்கோவில் குவிக்கப்பட்டன. ஏறத்தாழ 18 நாடுகளிலிருந்து 18,000க்கும் மேற்பட்ட துருப்புகள் 2000வது ஆண்டு முதலாக காங்கோவில் முகாமிட்டுள்ளன. இதுதவிர 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மருத்துவ சுகாதார நிவாரணப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் படைகளே பெருமளவில் குவிக்கப்பட்டு முன்னிலை வகிக்கின்றன. காங்கோ ஜனநாயகக் குடியரசு (ஈகீஇ) நாட்டில் ஐ.நா.வின் அமைதிப்படையாகச் செயல்பட்டு வரும் இந்திய இராணுவத்தினர் பாலியல் சுரண்டல், வன்முறை வன்புணர்ச்சி, மிரட்டிப் பணிய வைத்தல் சித்திரவதை, பருவமடையா இளஞ்சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறையை ஏவுதல், சிறுவர்களை ஓரினப் புணர்ச்சிக்காகப் பிடித்துச் செல்லுதல் முதலான கொடூரங்களைச் செய்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 12ஆம் நாளன்று ஐ.நா. அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கவனத்துக்கு வந்த 100க்கும் மேற்பட்ட வழக்குகளில், ஆழமான விசாரணைக்கு முன்னரே குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாகவும், இவற்றில் 1000க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. அதிகாரிகள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐ.நா. மன்றத் தலைவரான பான் கி மூன், விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் காமவெறி பயங்கரவாத வெறியாட்டங்களை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், இத்தகைய குற்றங்களை ஒருக்காலும் அனுமதிக்கவே கூடாது என்றும், இந்திய சட்டப்படி இக்குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்திய அரசும், இராணுவத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் முழுமையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்திய இராணுவத்தின் காமவெறி பயங்கரவாத அட்டூழியங்கள் இப்போது முதன்முறையாக நடப்பவையல்ல. கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை இத்தகைய அட்டூழியங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் இத்தகைய வெறியாட்டங்கள் பற்றி ஐ.நா.வின் உள்விவகார மேற்பார்வை சேவை அலுவலகம் (OஐOகு) விசாரணை நடத்தி இந்தியப் படையினருக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நான்குமுறை இந்திய இராணுவத்தின் காமவெறி அட்டூழியங்கள் பற்றி ஐ.நா. மன்றம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனாலும் இந்திய அரசு இக்குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. “இந்திய இராணுவ முகாம் அருகிலேயே ஆணுறைகள் இறைந்து கிடக்கின்றன. வடமேற்கிலுள்ள கோமா பகுதியிலும் மாசிசி நகரிலும் இந்திய இராணுவத்தின் காமவெறி அட்டூழியங்கள் மிக அதிகமாக நடந்துள்ளன. ருவாண்டா படுகொலைகளுக்குக் காரணமான இனக்குழு யுத்தப் பிரபுகளுக்காக இந்திய இராணுவம் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. இதற்கீடாக யானைத் தந்தங்களை இராணுவ அதிகாரிகள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர். தங்கக் கடத்தல், போதை மருந்து கடத்தலிலும் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது” என்று பி.பி.சி. செய்தியாளர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இக்குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று இவ்வழக்குகள் முடக்கப்பட்டன. சாதாரண சிப்பாய்கள் மட்டுமல்ல, லெப்டிணன்ட் கர்னல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இத்தகைய கடத்தல், பாலியல் வன்புணர்ச்சிக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். கர்னல் தாலும் டூபி, கர்னல் தீபக்சிங் நாயல், ஹவில்தார் சுரேஷ் பாண்டுரங் ஆகியோர் மாசிசி நகரில் தங்களது கடத்தல் குற்றங்களுக்கு உடன்பட மறுத்த உள்ளூர் வியாபாரிகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். காங்கோவிலுள்ள இந்திய அமைதிப்படை தளபதியான கர்னல் சந்த்சரோகா, காங்கோவின் இனக்குழு யுத்தப் பிரபுக்களுக்கு ஆயுதங்களைக் கடத்தி விற்று ஆதாயமடைந்துள்ளார். இந்த உண்மைகள் மெதுவாகக் கசிந்து பிரிகேடியர் இந்தர்ஜித் நாராயண் என்ற இராணுவ அதிகாரி மூலம் துறை சார்ந்த விசாரணையை இந்திய இராணுவம் நடத்தி வருகிறது. ஆனாலும் இந்த உண்மைகளை “தேசிய’ப் பத்திரிகைகள் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன. இந்திய அரசோ இக்காமவெறி கிரிமினல் கும்பல் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தேசபக்தி புனிதப் போர்வையால் இக்குற்றங்களை மூடி மறைத்து வருகிறது. உலகெங்கும் மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போர்களாலும் போர்க்குற்றங்களாலும் உலக அரங்கில் அம்பலப்பட்டு நிற்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய வல்லரசுகள், இப்போது புதிய உத்தியைப் பின்பற்றுகின்றன. தமது ஆதிக்கமும் அட்டூழியமும் அம்பலப்படாதிருக்க, ஏழை நாட்டுப் படைகளை அதிக அளவில் சேர்த்து அனைத்துலக அமைதிப்படை என்ற பெயர் சூட்டி, அதற்கு சாதுவான தோற்றத்தையும் அளிக்கின்றன. உலகை மறுபங்கீடு செய்யவும், மேலாதிக்கம் செலுத்தவும் இந்த அமைதிப் படைகளை உலகின் பல நாடுகளில் கொண்டு போய் குவிக்கின்றன. இந்த வகையில், ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய அரசும் அமைதிப் படையை அனுப்புகிறது. இத்தகைய விசுவாச சேவையின் மூலம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெறவும் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய கட்டளையை நிறைவேற்றும் நம்பகமான துணை வல்லரசாக அங்கீகாரம் பெறவும் இந்திய ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது என்ற பெயரில் சர்வகட்சி ஆதரவுடன் இதைச் சாதிக்க முயற்சிக்கின்றனர். அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாகப் பசப்பிக் கொண்டு செல்லும் இந்த அமைதிப் படைகள் காந்தீய உபதேசம் செய்து கொண்டிருப்பதில்லை. எந்த நாட்டினுள் அமைதிப்படைகள் நுழைந்தாலும், அது மக்களை ஒடுக்குவதும் சூறையாடுவதும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும்தான் நடந்துள்ளது. ஈழம் மட்டுமல்ல; காங்கோ, சியாரா, லியோன், லைபீரியா, கினியா, ஐவரிகோஸ்ட், ஹெய்தி முதலான நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியங்கள் ஏற்கெனவே உலக அரங்கில் அம்பலப்பட்டுள்ளன. நமது வரிப்பணத்தைத் தின்று கொழுத்துத் திரியும் இந்திய இராணுவம் உள்நாட்டில் மட்டுமின்றி, இப்போது இன்னும் பிற ஏழை நாடுகளிலும் தனது பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர இனியும் அனுமதிக்க முடியாது. ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களுக்குத் தொண்டூழியம் செய்ய அமைதிப் படை என்ற பெயரில் இந்திய அரசு பிற நாடுகளுக்கு இராணுவத்தை அனுப்புவதையும், இதனை அங்கீகரித்து நியாயப்படுத்தும் ஐ.நா. மன்றம் உள்ளிட்ட ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களையும் அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காமவெறி இராணுவ பயங்கரவாத கிரிமினல்களைத் தூக்கிலிட்டு தண்டிக்காமல், இப்பயங்கரவாத கிரிமினல் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்திடவும் முடியாது. · குமார் நன்றி புதிய ஜனநாயகம், இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்! July 11, 2011  Posted by இளமாறன் in இந்தியா. Tags: அரசியல்இந்திய இராணுவம்நிகழ்வுகள்மறுகாலனியாக்கம் add a comment காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன. காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலை யிலேயே சென்றுவிட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். Posted Image மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃபரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கும் காயங்களோடும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களது சடலங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. அகால ‘மரணமடைந்த’ நீலோஃபர் நிறைமாதக் கர்ப்பிணி என்பதும் ஆஸியா ஜான் படிப்பில் கெட்டிக்கார மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்விரு இளம் பெண்களும் இறந்து கிடந்த நிலையைப் பார்த்த பொதுமக்கள், “அவர்கள் போலீசாராலோ அல்லது இராணுவச் சிப்பாகளாலோ கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்” எனச் சந்தேகம் கொண்டனர். இந்த மர்மமான ‘மரணங்கள்’ பற்றி விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை நடத்தி மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய போலீசாரோ சடலங்களைப் பார்த்த நிமிடமே, “அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாகத் தெரிவதாகவும், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்றும்” முடிவு செய்தனர். மேலும், இச் சம்பவம் பற்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவும் மறுத்து விட்டனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவும் போலீசாரின் தடாலடி முடிவுக்கு ஒத்தூதினார். ‘‘அரசாங்கமும் போலீசும் யாரையோ பாதுகாக்க முயலுவதாக’’ச் சந்தேகப்பட்ட பொதுமக்கள், அவ்விரு இளம் பெண்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனையடுத்து, அப்பெண்களின் சடலங்கள் ஷோபியன் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், போலீசின் நெருக்குதல் காரணமாக அரசு மருத்துவர்கள் ‘இம்மரணங்கள்’ பற்றி எவ்வித முடிவையும் அறிவிக்காமல் மௌனமாக இருந்துவிட்டனர். எனவே, வேறு நடுநிலையான மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். புல்வாமா நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் நடத்திய இரண்டாவது பிரேதப் பரிசோதனையும், அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்களா இல்லையா என்பது பற்றியோ, அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது பற்றியோ முடிவான அறிக்கை எதனையும் தரவில்லை என்றே கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மும்மரமாகத் திரிந்த போலீசார், இரண்டாவது பிரேதப் பரிசோதனை முடிந்தவுடனேயே அச்சடலங்களைப் புதைத்துவிடுமாறு கூறிவிட்டனர். புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டியெடுப்பது உள்ளூர் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் எனக் கூறி, மூன்றாவது பிரேதப் பரிசோதனை என்ற யோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது, மாநில அரசு. தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க ஏகப்பட்ட உளவுப் பிரிவுகளை வைத்திருக்கும் அரசுக்கு, இந்த ‘மரணங்களுக்கு’ப் பின்னுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருந்திருக்க முடியாது. போலீசும், அரசும், தேசியவாதிகளும் கூறிவருதைப் போல இந்த மரணங்கள் விபத்தினால் நேர்ந்தவை என்பது உண்மையாகவே இருந்தாலும், அவ்வுண்மையை காசுமீர் மக்கள் நம்பக்கூடிய நடுநிலையான அமைப்பின் மூலம் நிரூபிப்பதற்கும் அரசு தயாராக இல்லை. மாறாக, மக்களின் கோபத்திற்கு வடிகால் வெட்டுவதற்காக, வழக்கம் போலவே விசாரணை கமிசன்களை அமைத்திருக்கிறது, அம்மாநில அரசு. மேலும், நியாயம் கேட்டுப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக பொது அமைதியைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் இறந்து போனான். சையத் ஷா கீலானி, ஷாபிர் ஷா, மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், யாசின் மாலிக், ஜாவேத் மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும், சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மக்கள் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி போலீசையும் துணை இராணுவப் படைகளையும் சந்தேகிப்பதாக இந்திய தேசியவாதிகள் அலுத்துக் கொள்கிறார்கள். ஒரு குற்றம் நடந்தால், அது பற்றி விசாரிக்க போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரிக்க ‘அழைத்து’ச் செல்வதில்லையா? அது போலத்தான் காஷ்மீர் மக்களின் சந்தேகத்தையும் பார்க்க வேண்டும். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளோடு நடந்த ‘மோதலில்’ ஐந்து முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஐவரும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இப்படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடி யிருக்காவிட்டால், அந்த ஐவரும் சிட்டிசிங்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி முசுலீம்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது. ஜம்மு-காஷ்மீர் போலீசுத் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு பணம், பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்துல் ரஹ்மான் பத்தர், ஷௌகத் கான், நஸிர் அகமது தேகா உள்ளிட்ட பல அப்பாவி முசுலீம்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்ற உண்மை 2007-இல் அம்பலமானது. இப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டதாக மப்பில் திரிந்த காக்கிச்சட்டை கிரிமினல்களை காஷ்மீர் மக்களின் போராட்டம்தான் சட்டத்தின் முன் நிறுத்தியது. போலீசோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இவ்விரு பெண்களையும் கடத்திக்கொண்டு போ, பாலியல் பலாத்காரப்படுத்திய பின் கொன்றிருக்கக்கூடாதா என்ற கேள்வியை எழுப்ப மறுக்கும் இந்திய தேசிய வாதிகள், இப்படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு நடக்கும் போராட்டங்களை, அப்போராட்டங்கள் இந்திய இராணுவத்தைக் குற்றம் சுமத்தும் ஒரே காரணத்திற்காகவே, அவற்றை இனவெறியையும், மதவெறி யையும் தூண்டிவிடும் போராட்டங்கள் என அவதூறு செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட பிரிவினைவாதிகள் மீண்டும் செல்வாக்குப் பெறவே மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார்கள். காஷ்மீரின் தென்பகுதியில் போராடிவரும் மக்கள் “குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டி!” எனக் கோரிதான் போராடுகிறார்களேயொழிய, சுதந்திரம் கேட்டுப் போராடவில்லை. ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும் காஷ்மீர் மக்களை அணுகும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கட்டுமே, யார் வேண்டாமென்று சோன்னது? பிரிவினைவாதிகளைவிட, காங்கிரசுக் கும்பல் உள்ளிட்ட இந்திய தேசியவாதிகள்தான் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தனிமைப்பட்டுக் கிடக்கின்றனர். நீலோஃபரும், ஆஸியாவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர் என்பது நிரூபணமானால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே போராட்டங்கள் வெடித்துவிடும் என்பதனால்தான், ஷோபியன் போலீசார் முதல் பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களிடம், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரபடுத்தப்பட்டிருந்தால் அவ்வுண்மையை மறுக்க வேண்டும் அல்லது மழுப்ப வேண்டும்” என நெருக்குதல் கொடுத்ததாகவும்; இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்திய மருத்துவர்களுள் ஒருவர் ஷோபியன் நகர மக்களிடம் அவர்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ள உண்மையைச் சோன்னதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளரால் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் “தெகல்கா” வார இதழில் (20 ஜூன் 2009) பிரேம் சங்கர் ஜா என்றொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்திய தேசியவாதிகள் அவதூறு செய்து வருவது போல காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் உண்மையைக் கண்டுபிடிக்கத் தடையாக இல்லை. மாறாக, அதிகார வர்க்கம்தான், உண்மை வெளியே தெரிந்தால், இந்திய தேசியம் நாறிவிடும் என்பதால், உண்மையை அமுக்கிவிட முயன்று வருகிறது என்று கூற வேண்டும். பிரிவினைவாதத்தையோ, பிரிவினைவாத அமைப்புகளையோ ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலீம் அறிவுத் துறையினர்கூட, இராணுவமும், போலீசும் வரைமுறையின்றி நடத்திவரும் மனித உரிமை மீறல்களும், இராணுவமும், துணை இராணுவப் படைகளும் திரும்பப் பெறப்படாமல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுதான் மக்களின் சந்தேகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளனர். இவையனைத்தும் காஷ்மீர் அமைதியாக இல்லை என்பதைத்தான், இந்திய தேசியத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் எந்தவொரு அமைப்பையும் அம்மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதனால்தான் சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு மரணமும், சந்தேகத்திற்கிடமான அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (அமர்நாத் கோயில் நில மாற்றம் போன்றவை) அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கிவிடுகிறது. இப்போராட்டங்களை அவதூறு செய்தோ அடக்குமுறைகளை ஏவியோ ஒடுக்கிவிட இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அம்முயற்சிகள் அனைத்தும் எரிகிற நெருப்பில் எண்ணெ வார்ப்பது போலவே அமைந்து விடுகின்றன. குட்டு உடைகிறது! காஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டங்களையடுத்து, அம்மாநில அரசு, “நீலோஃபர் ஜானும், ஆஸியா ஜானும் இறந்து போனதற்கான உண்மையான காரணத்தையும், சூழ்நிலையையும் மற்றும் இப்பிரச்சினையை யொட்டி நடந்த போராட்டங்களை அரசு அணுகிய விதம் குறித்தும்” விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி முஸாபர் ஜான் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தது. அக்கமிசன் அளித்துள்ள இடைக்கால அறிக்கையில், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டுப் பின் கொல்லப்பட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக”ச் சுட்டிக் காட்டி யிருக்கிறது. மேலும் போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோரின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்து போவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இதனையடுத்து, போலீசு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடைக்காலப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “ஆதாரங்கள் ‘அழிந்து’ போகும் அளவிற்கு திறமைக் குறைவாக நடந்து கொள்ளக் காரணம் என்ன?” என்ற கேள்விக்கான பதிலை இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடமிருந்து வாங்கிவிட்டால், இந்த ‘மர்ம’ மரணங்களுக்குப் பின்னுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கூட அம்பலமாகிவிடாதா? அந்த இரு பெண்களுள் ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் மறைக்க முயன்று முடியாமல் போன பிறகும், தேசியவாதிகள் இக்கேள்வியை எழுப்ப மறுத்து வருகிறார்கள். மாறாக, இக்கமிசன் புதிய ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, இந்த இடைக்கால அறிக்கையை ஒதுக்கித் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த பெரிய மனிதர்களே ‘மனசாட்சிக்குப் பயந்து’ குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, “அதற்கும் ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா?” என இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது!

SHARE