குளோரின் அமில தாக்குதலால் கை, கால்களை இழக்கும் மக்கள்

329
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அவர்களை ஒடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் களத்தில் இறங்கியுள்ளன.அமெரிக்காவின் வான்வழி தாக்குதலை தொடர்ந்து, ஈராக் மற்றும் குர்தீஷ் பாதுகாப்பு படைகள் களத்தில் வலுவுடன் இறங்கின.

இந்நிலையில், குர்தீஷ் பிராந்தியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் கார் வெடிகுண்டு தாக்குதலில் குளோரின் அமிலத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23-ம் திகதி நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் குளோரின் அமிலம் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குளோரின் அமில தாக்குதலினால் ஏராளமான மக்கள் உடல் சிதறி இறந்துள்ளனர்.

பலர் கை, கால்களை இழந்து முடமாகி உள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் குளோரின் அமிலத்தை போர் ஆயுதமாக பயன்படுத்தியதால், ஏராளமான மக்களுக்கு வாந்தி, மயக்கத்துடன் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று குர்தீஷ் பிராந்திய பாதுகாப்பு கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.

SHARE