22 வயதில் 80 வயது முதியவர் போல் மாறிய உடல்: பெண்ணின் அவலநிலை (வீடியோ இணைப்பு)

352
மெக்சிகோவில் (Mexico) பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களாக சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் உள்ள சலவை கடை ஒன்றில் ஜுண்டூரி(Zunduri – Age 22) என்ற பெண் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.அந்த சலவை கடையின் முதலாளியான ஆகொ(Ochoa ) என்ற பெண், ஜுண்டூரியை இரும்பு சங்கிலியில் கட்டிவைத்து கொடுமை செய்துள்ளார்.

மேலும், ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வேலை வாங்கியுள்ளார். அவர் சொன்னபடி வேலை செய்யவில்லை என கூறி உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25 திகதி ஜுண்டூரி அங்கு இருந்து தப்பித்துள்ளார்.

சலவை கடையில் தான் சந்தித்த கொடுமைகளை கூறிய ஜுண்டுரி, அவர்கள் தன்னை மிகவும் துன்புறுத்தியதாகவும், சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால் நின்றுகொண்டே தூங்கியதாகவும், மேலும் பாலித்தீன் பையில் மலம் கழிக்க வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜுண்டூரியின் உடல் 80 வயது முதியவர் போல் உள்ளதாக கூறினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆகொவுக்கு 50 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE