டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக மக்களை விழிப்பூட்டு; பிரசுர விநியோகம்,

430

 

அம்பாறை மாவட்டத்தில் திடீர் காலநிலை சீர்குலைவுக்கு மத்தியிலும் தேசிய டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டங்களே இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இன்று அதிகாலை முதலே அடிக்கடி மழைபெய்தவண்ணமிருந்தபோதிலும் டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் பாதிப்புறாவண்ணம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுப்புக்களை ஒழுங்கமைத்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

dengu nithavur 585885d (1)

இந்த மாவட்டத்தின முக்கிய பிரதேசங்களுள் ஒன்றான நிந்தவூர் சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் திட்டமிடப்பட்டவாறு இன்று டெங்கு ஒழிப்பு வார 2 ஆவது நாள் செயற்றிட்டங்கள் கிரமமாக மேற்கொள்ளப்பட்டன.

நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பரின் தலைமையிலும், வழிகாட்டலிலும் வெற்றிகரமாக இன்றும் டெங்கு ஒழிப்பு வார நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக மக்களை விழிப்பூட்டு; பிரசுர விநியோகம், களப்பரிசோதனைகள், சிரமதானம், டெங்கு நுளம்புப் பெருக்க தரிசுநில நடவடிக்கைகள், குப்பைகள் அகற்றல் முதலான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. நிந்தவூரிலுள்ள 25 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுக்குள்ளும் டெங்கு அபாயம் இனங்காணப்பட்ட ஆறு பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர் பரூஸா நக்பர் தெரிவித்தார்.

SHARE