2,271 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த பெண்

184

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ஆண்டர்சன் (29) என்பவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

வழக்கமாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலைவிட, 10 மடங்கு அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது. இதுவரை 2,271 லிட்டர் பாலை, தானமாக வழங்கியிருக்கிறார்.

ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பால் எடுப்பதற்கும் மீதி 5 மணி நேரத்தைப் பதப்படுத்துவதற்கும் செலவிடுகிறார்.

அதிகமாக தாய்ப்பால் வெளியேறியதால், தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்து இதனை செய்து வருகிறார்.

தினமும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்.

இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மார்களின் குழந்தைகள், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்தவர்களின் குழந்தைகள், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகப் பாலை வழங்கி வருகிறார்.

SHARE