23.07.2016 அன்று நடைபெற்ற வவுனியா பண்டாரிகுளம் கிராமஅபிவிருத்திச்சங்க தந்தை
செல்வா பாலர்பாடசாலையின் விளையாட்டு விழா
மேற்படி பாலர்பாடசாலையின் விளையாட்டு விழாவானது கிராமஅபிவிருத்திச்சங்க தலைவர்
கலாநிதி ப.தியாகராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக
பிரதம சிறப்பு கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டவர்களுக்கு மலர்மாலை அணிவித்து
மாணவர்களின் அணிவகுப்புடன் அழைத்துவருவதையும் இவ்விளையாட்டு விழாவில் பிரதம
சிறப்பு கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சுதேச அமைச்சர் கௌரவ
ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் தியாகராசா
வடமாகாண முன்னநாள் உறுப்பினர் M.P.நடராசா பகுதி கிராமசேவையாளர்
கிராமஅபிவிருத்திச்சங்க தலைவர் செயலாளர் அங்கத்தவர்கள் பண்டாரிகுளம்
பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஏனைய பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அயல்
முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்