கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது எப்படி

343

கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப்

கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப்

தேவையான பொருட்கள்

கேரட் – 2
ஸ்வீட் கார்ன் – 1/2 கப்
வெங்காயம் – 1
சோள மாவு – 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
முட்டை – 3
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 4 கப்

செய்முறை

முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கேரட், வெங்காயம், ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

அனைத்தும் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

இப்போது அதில் முட்டைகள் உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்

கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் ரெடி.
SHARE