210

மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப் படத்தின்  மூலம் பிரபலமானவர் மடோனா செபஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கிவரும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக  அவர் நடித்து வருகிறார். இத் திரைப் படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மடோனா செபஸ்டியன்  அண்மையில் மணப்பெண் ஆடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

SHARE