237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது

322

 

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி 225 ஆக காணப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது. இந்த நிலையில் அமைச்சரவை அனுமதியுடன் குறித்த சட்டமூலம் இன்று வர்த்தமானியில் சேர்க்கப்படவுள்ளது. ஏற்கனவே, புதிய தேர்தல் நடைமுறையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும். எனினும் புதிய தேர்தல் நடைமுறையில் 125 இடங்கள் தொகுதி அடிப்படையிலும் இதர 100 இடங்களில் 75 இடங்கள் விகிதாசார அடிப்படையிலும் எஞ்சிய 25 இடங்கள் தேசியப் பட்டியலின் கீழான நியமனங்கள் மூலமும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் கடந்த திங்கட்கிழமை மாலை அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதனை சிறு, சிறுபான்மைக் கட்சிகள் கடுமையாக எதிர்த்திருந்தன. இந்த நிலையில் மீண்டும் 12 ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21-maithiripala-sirisena-rajapaksa-7009 srilanka_2272062g

SHARE