24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்கைது செய்துள்ளனர்

325

24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் பல மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கச்சத்தீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு சுமார் 3000 மீனவர்களும் 600 படகுகளும் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பத்து படகுகளின் மூலம் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்ளை அச்சுறுத்தியதாகவும், 24 மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது மரபு ரீதியான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு;க்கள் குறித்து இலங்கைக் கடற்படையினர் கருத்து எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை

SHARE