இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 24 மணி நேரத்துக்குள் அதனை மீள் அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவின் பெயரில் குறித்த பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.