புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன்.
புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்து இருக்கவில்லை, புலிகளுடன் எவ்வித கூட்டும் தமிழ் கூட்டமைப்புக்கு கிடையாது, புலிகளின் கொள்கையை ஏற்கவும் இல்லை என்று இவர் தெரிவித்துள்ளார். தமிழ் கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காக பாடுபடுகின்றது, அதற்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்றார்.
இவர் மேலும் தெரிவிக்கையில் புலிகள் மீண்டும் ஓரணி திரள்வார்கள், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் புரிவார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என்று கூறிய இவர் அப்படி ஒரு நிலை வந்தாலும் மக்கள் புலிகளை ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள், ஏனென்றால் போரில் அதிக பாதிப்புக்களை இம்மக்களே சந்தித்தனர், எனவே பயங்கரவாதத்தை மீண்டும் அனுமதிக்கவே மாட்டார்கள் என்று வலியுறுத்தினார்.