25 ஆம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!

283

ஆறாவது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்ட பின்னர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவருடன் கூட்டாக ஒரே நேரத்தில் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில், வரும் 25.05.2016 (புதன்கிழமை) முதல் சட்டப்பேரவை கூடுகிறது.

காலை 11 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்பார்கள்.

சட்டப்பேரவைத் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற யூன் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

SHARE