அண்ணாத்த படத்தில் ரஜினியின் மார்க்கெட் அப்படியே சறுக்கிறது, இதனால் அவர் சில மோசமான விமர்சனங்களை சந்தித்தார்.
எனவே ரஜினி என்னயா பாக்ஸ் ஆபிஸ் சறுக்கிறது என எழுதுகிறீர்கள், இப்ப பேசுங்க என அவர் கொடுத்த படம் தான் ஜெயிலர்.
ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படம் நல்ல லாபம் கொடுக்க ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் என 3 பேருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்து லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்துள்ளனர்.
பட பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 500 கோடிக்கு மேல் படம் நல்ல வசூலை செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனமே அறிவிக்க இப்போது படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 610 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.