2,500 ரூபாய் பணம் இல்லாததால் மனைவியின் உடலை குப்பைகள் கொண்டு எரித்த ஏழை கணவர்! தொடரும் வேதனைகள்….

257

ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை 12 கி.மீ அவரது கணவர் தோளில் சுமந்து கொண்டு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவலத்தின் தொடர்கதையாக மற்றொரு அவலம் போபாலில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பில்(65). நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடந்த இவருடைய மனைவி நஜோ பாய் திடீரென காலமானார்.

மனைவியின் உடலை தகனம் செய்வதற்கு சுடுகாட்டில் உள்ள ஊழியர்கள் 2,500 ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதீசிடம் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது.

இதனால், தகனம் செய்ய மறுத்த ஊழியர்கள் மனைவியின் உடலை ஆற்றில் எறிந்து விடுவாறு அறிவுரை கூறியுள்ளனர். அப்பகுதியில் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாத ஏழைகள் இறந்தவர்களின் உடலை ஆற்றில் எறிந்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் தனது மனைவியின் உடலை முறையாக தகனம் செய்ய வேண்டும் என ஜகதீஷ் பில் உறுதியாக இருந்துள்ளார். இதனால், ஊழியர்கள் கூறிய யோசனையை ஏற்க அவர் மனம் மறுத்துவிட்டது.

இதையடுத்து ஜெகதீஷ் தானாகவே மனைவிக்கு தகனம் செய்வதற்கு சுடுகாட்டின் அருகே ஏற்பாடுகள் செய்தார். ஊர்மக்களின் மூலம் தகவல் அறிந்த அப்பகுதி தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் தனது சொந்த பணத்தில் ஜெகதீஷ் பில்லுக்கு 1,500 ரூபாய் நிதியுதவி அளித்தார்.

ஜெகதீஷ் தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொண்டு மரக்கட்டைகள் வாங்கினார்.

உடலை எரியூட்டுவதற்கு மரக்கட்டைகள் போதுமாகவில்லை. இதன்காரணமாக, அப்பகுதியில் கிடந்த குப்பை காகிதங்கள், டயர்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து மனைவியின் உடலுக்கு எரியூட்டினார்.waif-dath

SHARE