25,000 டொலர் பரிசு தொகை அறிவிப்பு: கொலையாளியின் இருப்பிடத்தை பொலிசுக்கு காட்டி கொடுத்த நபர்

313

கனடா நாட்டில் கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபரை பிடிக்க உதவினால் 25,000 டொலர் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து கொலையாளி தற்போது பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

டொரோண்டோ மாகாணத்தில் உள்ள எரிவாயு விற்பனை செய்யும் நிலையத்தில் எரிவாயுவை நிரப்பிக்கொண்டு கட்டணம் செலுத்தாமல் நபர் ஒருவர் காரில் தப்ப முயன்றுள்ளார்.

இதனை கவனித்த ஜெயேஸ் பிரஜபதி(44) என்ற ஊழியர் காரை மடக்கியபோது, அந்த நபர் ஜெயேஸ் மீது காரை ஏற்றி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இரண்டு வருடங்களாக கொலையாளி பிடிப்படாமல் பொலிசாருக்கு போக்கு காட்டி வந்த நிலையில், கொலையாளி பற்றிய தகவல் அளிக்க்கும் நபருக்கு 25,000 டொலர் பரிசு வழங்கப்படும் என இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாண்டீரியல் நகர் பொலிசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒருவர், மாண்டீரியலில் உள்ள ஒரு ரகசிய வீட்டில் பொலிசாரால் தேடப்படும் கொலையாளி தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, அதிரடி வியூகம் வகுத்த பொலிசார், மேக்ஸ் எட்வின் என்ற அந்த கொலையாளி தங்கியிருந்த இருப்பிடத்தை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான ஸ்டேசி காலண்ட், தொலைக்காட்சியில் பொலிஸ் வெளியிட்ட அறிவிப்பை நபர் ஒருவர் பார்த்து தங்களுக்கு ரகசிய தகவல் அளித்தார்.

நபரின் தகவலால் தான் கொலையாளியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளோம். அந்த நபருக்கு பொலிஸ் துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

கொலையாளியை பிடிக்க உதவிய பெயர் வெளியிடப்படாத அந்த நபருக்கு 25,000 டொலர் பரிசு தொகை இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE