330
100 வயதிலும் நடனமாடி அசத்தும் அழகு பதுமை
100 வயதிலும் நடனமாடி உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் எய்லீன் கிரமர் என்ற மூதாட்டி.அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் எய்லீன் கிரமர், திறமை இருந்தால் எந்த வயதிலும் நடனமாடலாம் என நிரூபித்துள்ளார்.

தற்போது 100 வயதான போதும் பலருக்கும் நடனம் கற்றுக் கொடுத்து வருவதுடன், அசத்தலான நடனத்தால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதுகுறித்து எய்லீன், எனக்கு 100 வயது ஆகிறதா என சிரித்தபடியே கேள்வி எழுப்புகிறார்.

மேலும், வயதாகி விட்டதாக நான் ஒரு போதும் கருதவில்லை. திறமை, பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் நடனமாட முடிகிறது என தெரிவித்துள்ளார்.

24 வயதில் இருந்து மேடைகளில் நடனமாடி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE