விஷால் நடித்த ஆம்பள படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி.

506

விஷால் நடித்த ஆம்பள படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி. தற்போது விஷால் பாயும் புலி படத்திற்கு பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பின்னணி பாடகராக இருந்த ஆதி முதன்முதலாக ‘ஆம்பள’ படம் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அதிலும் ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது.

இதுகுறித்து ஆதி, இரண்டாவது முறையாக விஷால் படத்திற்கு இசையமைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

0125395b-9c33-475d-b737-952e848530ac_S_secvpf NT_120906153801000000

SHARE