27 வருடங்களின் பின்னர் வல்வெட்டித்துறை தொண்டமனாறு ஊடாக யாழ்பாணம் நோக்கிய புதிய பேரூந்து சேவை ஆரம்பம் – வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.

323
27 வருடங்களின் பின்னர் வல்வெட்டித்துறை தொண்டமனாறு ஊடாக  யாழ்பாணம் நோக்கிய புதிய பேரூந்து சேவை ஆரம்பம் – வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்….
கடந்த 27 ஆண்டுகளாக 752 பாதை இலக்க பேரூந்து சேவை மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் அங்குள்ள இளைஞர்களின் விடாத முயற்சியின் காரணமாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு தெரியப்படுத்தியதன் விளைவாக உடனடியாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலைக்கு பணிக்கப்பட்டு 06-04-2015 திங்கள் காலை பரித்திதுறையில் இருந்து வல்வெட்டித்துறை, தொண்டமனாறு வழியாக யாழ்ப்பாணத்துக்கான இப் பேரூந்து சேவை உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இன் நிகழ்விற்கு மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
unnamed (3)
SHARE