272 கிலோ இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நபர் உயிரிழந்தார்!

118

 

அமெரிக்காவில் 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல் இழந்து முடங்கினார்.

இதனையடுத்து சுவாசிக்க முடியாமல் அவர் சிரமப்பட, டெக்சாஸில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பின்னர் 272 கிலோ கிராம் எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்தார். பின்பு வாழ்நாள் முழுவதும் அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர் நேற்றையதினம் (12-03-2024) உயிரிழந்துள்ளார்.

SHARE