29 நாளில் படமான சரபம் 

405
திருகுமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம், சரபம். நவின் சந்திரா, புதுமுகம் சலோனி லுத்ரா, நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு. பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்துள்ளார். படத்தை அருண்மோகன் இயக்கி உள்ளார். இவர் நடிகர் அனுமோகனின் மகன். படம் பற்றி அருண்மோகன் கூறியதாவது:கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றினேன். இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன்.
சரபம் என்பது புராண விலங்குகளில் ஒன்று. பாதி உடல் பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருக்கும். அன்பும் ஆக்ரோஷமும் தான் இந்த மிருகத்தின் தனித்தன்மை. இந்தப் படத்தில் வரும் கேரக்டர்களும் அந்த மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவம் அனைத்து கேரக்டர்களையும் ஒன்றிணைப்பதுதான் படம். 29 நாளில் முடிக்கப்பட்ட படம் இது. ஆகஸ்ட் 1&ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது

SHARE