3ஆவது முறையாகவும் சந்திக்கும் இரு துருவங்கள்

174

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாகவும் சந்தித்து பேசுவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங் சென்றடைந்துள்ளார்.

பியாங்யாங் சர்வதேச சிமான நிலையத்தை சென்றடைந்த மூன் ஜே இன்னை வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றம் கிம் ஜோங் உன் சந்தித்துக் கொண்டனர்.

அச் சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்சங்களை கொண்ட உடன்படிக்கைளில் இரு  தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும் உடன்படிக்கை அம்சங்களை நிறைவேற்றவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்தன.

இந் நிலையிலேயே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது மனைவி மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட 110 உயர் மட்ட குழுவினருடன் வட கொரியா சென்றடைந்துள்ளனர்.

இரு நாட்டு தலைவர்களின் 3 நாட்கள் சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் எனவும் கொரிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE