மூன்றாவது திருமணம் ஆன சில மணி நேரங்களிலேயே டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை சோயப் மாலிக் படைத்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் கடந்த இரண்டு நாட்களாக செய்திகளில் இருந்து வருகிறார்.
சோயப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துவிட்டு, பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்தச் செய்தி சனிக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திருமணமான சில மணி நேரங்களிலேயே டி20 கிரிக்கெட்டில் ஆசியாவில் யாரும் செய்யாத அரிய சாதனையை சோயப் மாலிக் படைத்துள்ளார்.
ஆம், 41 வயதான சோயப் மாலிக் தற்போது டி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற சோயிப் மாலிக், ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மாலிக், பார்ச்சூன் பாரிஷலுக்கு எதிரான போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம்+ ஓட்டங்களை கடந்த ஆசியாவின் முதல் பேட்ஸ்மேன் மற்றும் உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். ஆசியாவுக்கு வெளியே கிறிஸ் கெய்ல் ஏற்கனவே 13 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார்.
ஜனவரி 20, சனிக்கிழமையன்று, சோயிப் மாலிக் தனது காதலியும் பிரபல பாகிஸ்தான் நடிகையுமான சனா ஜாவேத் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கடந்த ஒரு வருடமாக டேட்டிங்கில் இருந்த இந்த ஜோடி இறுதியாக ஒன்றாக இணைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவை unfollow செய்த சோயப் மாலிக், தற்போது சானியாவிடம் இருந்து நிரந்தரமாக விலகினார். சானியா மற்றும் சோயப் தம்பதிக்கு இசான் மிர்சா மாலிக் என்ற 5 வயது மகனும் உள்ளார். தற்போது சானியாவுடன் இசான் இருக்கிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் ஏப்ரல் 2010-ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் துபாயில் வசித்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக இந்த நட்சத்திர ஜோடியின் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வந்தது.