3 நாள் பயிற்சி ஆட்டம்: 50 ஓவர்களுக்கு இந்தியா 193 ஓட்டங்கள் சேர்ப்பு

259
இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களுக்கு 193  ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.அதற்கு முன்பாக இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியுடன் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.இந்த போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் ’வென்ற இலங்கை லெவன் அணி கேப்டன் திரிமான்னே, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் ஷிகர் தவானும் லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர்.

இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது லோகேஷ் ராகுல் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய தவான் அரைசதம் அடித்தார். பின்னர் வந்த ரோகித் சர்மா 7 ஓட்டங்களிலும் கோஹ்லி 8 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

சிறிது நேரத்தில் தவானும் 7 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த ரகானே மற்றும் புஜாரா மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் இருப்பதற்காக நிதானமாக ஆடி வருகின்றனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

புஜாரா 29 ஓட்டங்களுடனும் ரகானே 28 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

SHARE