3 வயது குழந்தையை ஆவேசமாக தாக்கிய தாய்..!! (வீடியோ)

759

அர்ஜெண்டினாவில் தாய் ஒருவர் தனது Tablet Computer- ஐ காணவில்லை என்பதற்காக தனது 3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bahia Blanca பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு 3 குழந்தைகள், மூத்த குழந்தைக்கு 3 வயதாகிறது. இக்குழந்தைகள் தங்களது தாயின் Tablet Computer- ஐ எடுத்து விளையாடிவிட்டு எங்கேயோ போட்டுவிட்டனர்.

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பிய தாய், தனது 3 வயது மகளிடம் எனது கணனி எங்கே? அதனை எங்கே வைத்தாய்? என கேட்டு கடுமையாக அடிக்கிறார்.

இதில், பயந்துபோன அந்த குழந்தை படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொள்கிறார். இருப்பினும் விடாப்பிடியாக அந்த தாய், கணனியை தேடிவிட்டு, அதுமட்டும் கிடைக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கூறி தனது மகளின் தலைமுடியை பிடித்து மேலே தூக்குகிறார்.

இந்த காட்சியை, அருகில் வசிக்கும் நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதையடுத்து, இதனைப்பார்த்த பலரும் அப்பெண்ணின் மீது குழந்தைகள் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்

SHARE