ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் இங்கு விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் போல் அங்கு மார்வல் காமிக்ஸ், DC காமிக்ஸ் என்று இரண்டு காமிக்ஸ் ரசிகர்களிடையே கடும் போட்டி இருக்கும்.
ஏற்கனவே மார்வெல் காமிக்ஸ் சார்பில் Avengers என்ற சூப்பர் ஹீரோஸ் படம் வெளிவந்தது, அதை தொடர்ந்து தற்போது DC காமிக்ஸ் சார்பில் பல சூப்பர் ஹீரோக்களை ஒன்றினைத்து எடுத்த படம் தான் Justice League.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது, அப்படியிருந்தும் முதல் வார இறுதியில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது.
மேலும், வரும் நாட்களில் வசூலை பொறுத்து தான் இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடிக்குமா? என்று தெரியும்.