தாக்குதலுக்காக ஐஎஸ் அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டவர்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியில் சிரியாவின் ஹோல்ஸ்டெயின் நகரைச் சேர்ந்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசார் விசாரணையின் போது, ஒருவரின் பெயர் மொகமத்(20) என்றும் கடந்த நவம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு ஜேர்மனியில் குடி பெயர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மற்ற இருவர்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை. இவர்கள் ஜேர்மனியில் எங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காக ஐஎஸ் அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது ஐஎஸ் அமைப்பின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்களா? என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இந்த மூவரையும் தீவீர விசாரணை நடத்திய பின்னரே உறுதியான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த மூவரும் பாரிஸ் தாக்குதலுக்கு சம்பந்தபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஐஎஸ் அமைப்பினர் வரும் நவம்பர் மாதம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே 30 முதல் 40 பேர் வரை ஐஎஸ் அமைப்பினர் ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.