சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனையின் 3-வதுமாடியிலிருந்து மனநோயாளி குதித்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டிருந்த மருத்துவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Muttenz என்ற நகரில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் 37 வயதானஒருவர் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த2012ம் ஆண்டு யூன் மாதம் 25 வயதானமனநோயாளி ஒருவரை அழைத்துக்கொண்டு அவரது சகோதரி மற்றும் தாயார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
மனநோயாளியை சோதனை செய்து பார்த்த மருத்துவர் அவருக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
அப்போது, தான்சிகரெட் பிடிக்க வேண்டும் என மனநோயாளி வற்புறுத்தியதால், அவரை3-வது மாடியில் உள்ள பால்கனிக்கு சென்று சிகரெட் பிடிக்குமாறு மருத்துவர் அனுமதி அளித்துள்ளார்.
நோயாளியுடன் அவரது சகோதரி மற்றும் தாயாரும் சென்றுள்ளனர். அப்போது,மாடிக்கு சென்ற அந்த மனநோயாளி திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அவரது உடல் தற்போது செயல்படாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.
மருத்துவமனைக்கு வந்த மனநோயாளியை சரியாக கவனிக்காத காரணத்தினால் தான் அவர் மாடியிலிருந்து குதித்ததாக மருத்துவர் மீது வழக்கு தொடக்கப்பட்டது.
கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கின் இறுடி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, ‘மனநோயாளியின் மன அழுத்தத்ததை குறைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பது ஒரு உளவியல் மருத்துவரின் வாதமாக உள்ளது.
மேலும், மனநோயாளியை திட்டமிட்டு மருத்துவர் சிகரெட் பிடிக்க அனுமதிக்கவில்லை என்பதும், மருத்துவர் குற்றமற்றவர் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபனம் ஆகியுள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.