3 வயது குழந்தைக்கு சிறை! ஆடிப்போன நீதிமன்றம்

373

order 4597e

மதுரையில் 3 வயது குழந்தையை கைது செய்து சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ஒருவர், 3 வயது குழந்தை உட்பட 3 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார்.

அதன்பின்னர் அவர்களை குழித்துறை மாஜிஸ்ரேட்டிடம் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, குழந்தை உட்பட 3 பேரையும் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் குழந்தையின் தாய், எனது குழந்தை விஜய்யை என்னிடம் இருந்து பிரித்து சிறையில் அடைத்துள்ளனர், எனவே அவனை மீட்டு என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான அரசு வழக்கறிஞர், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குழந்தை தனது சித்தியுடன் சிறையில் உள்ளது என கூறியதை கேட்டு நீதிமன்றமே ஆச்சரியத்தில் மூழ்கியது.

மேலும் இதனைக்கேட்டு கோபமடைந்த நீதிபதி, சிறுவர்களையே சிறைக்கு அனுப்பாமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம், அப்படியிருக்கையில் குழந்தையை சிறையில் அடைக்கும் உரிமையை யார் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்மென மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

SHARE