தமிழகத்தில் சென்னை எண்ணூரில் குழந்தை ரித்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில். எதிர் வீட்டுப் பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா நேற்று குப்பைமேட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அதன் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆட்சியர் அப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும் குழந்தையை கொலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குழந்தையின் வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததாலும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதாலும் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தினர்.
அதில் குழந்தை ரித்திகா அடிக்கடி சென்று விளையாடும் எதிர்வீட்டினர் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையை நகைக்காக எதிர்வீட்டுப் பெண் ரேவதி கொலை செய்ததுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அவரிடம் ரித்திகாவின் கொலுசு உள்ளிட்ட நகைகளை பொலிசார் பறிமுதல் செய்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் இணைப்பு- சென்னையில் 3 வயது சிறுமி கடத்திக் கொலை
சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிறுமி கிருத்திகா. நேற்று பிற்பகல் சிறுமி கிருத்திகா அருகே உள்ள வீட்டுக்கு விளையாட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியின் தயார் வெகு நேரமாகியும் சிறுமியை காணாததால் குறித்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் சிறுமியை அங்கு காணவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து கலக்கமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்காததால், பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மணலி விரைவுச்சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் உடலில் பலத்த காயங்களுடன், வாயில் துணியை வைத்து மூடிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரித்த போது, அது மாயமான சிறுமி கிருத்திகா என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், சிறுமி கிருத்திகாவை அழைத்து சென்றதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, சிறுமி கிருத்திகா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார எனவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.