3 வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் – சாய் பல்லவி

152

தமிழ் பெண்ணான சாய் பல்லவி ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மலர் கதாபாத்திரம் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானவர். இப்படத்தை தொடர்ந்து துல்கர் சல்மானுடன் கலி என்ற படத்தில் நடித்தார்.

அதன் பின் சாய் பல்லவியின் கவனம் முழுவதும் தெலுங்கு, தமிழ் என பிற மொழிகள் பக்கம் சென்றுவிட்டது. தற்போது 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் ஹீரோவாக இப்படத்தில் நடிக்க ஹீரோயினாக சாய்ப்பல்லவி நடிக்கவுள்ளார். அதிரன் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை விவேக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கேரள ரசிகர்களுக்காக தனது புது கெட்டப்பை கேரள புடவையில் வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி.

SHARE