30 வருடங்களாக வசித்த அகதியை நாடு கடத்திய கனடா அரசு!

340

cana9

கனடா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்த அகதி ஒருவரை அந்நாட்டு அரசு இன்று அவரது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஆல்வின் புரவ்ன்(40) என்ற நபர் 10 வயதாக இருந்தபோது கனடா நாட்டில் குடியேறியுள்ளார். பின்னர், குடியிருப்பு அனுமதியும் முறைப்படி பெற்று வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கனடாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதாக அவர் மீது 17 வழக்குகள் பதியப்பட்டன. இக்குற்றங்களை தொடர்ந்து அவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைக்காலத்தை அனுபவித்து விடுதலையான ஆல்வினை கடந்த 2011ம் ஆண்டு பொலிசார் கைது செய்து தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

நாடு திரும்ப ஆல்வின் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும், பயணம் மேற்கொள்ள தேவையான ஆவணங்களை ஜமைக்கா அரசிடம் கனடா அரசு கேட்டுள்ளது.

ஆனால், ஜமைக்கா அரசு இந்த கோரிக்கையை ஏற்காத காரணத்தினால், எவ்வித வழக்கும் பதியப்படமால் ஆல்வின் கடந்த 5 வருடங்களாக தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆல்வின் பல்வேறு உடல்நலக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என கனடா நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஜமைக்கா அரசிடம் முறையான அனுமதி பெற்ற கனடா இன்று ரொறொன்றோ நகரில் இருந்து விமானத்தில் ஆல்வினை அவரது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.

எனினும், உரிய வழக்குகள் எதுவும் இன்றி 5 வருடங்கள் தடுப்பு முகாமில் அடைத்து வைதிருந்த காரணத்திற்காக கனடா அரசு தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆல்வின் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE