சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் படகு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தம்மை காப்பாற்றியவர்களை காண்பதற்காக கனடாவில் வசிக்கும் 110 தமிழர்கள் நியூபௌன்ட்லேன்ட், சென். மேரீஸ் குடாவுக்கு நேற்று சென்றிருந்தனர்.
கைவிடப்பட்ட படகு ஒன்றில் இருந்து 150 தமிழர்கள், 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதியன்று நியூபௌன்ட்லேன்ட் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டனர்.
இதன்பின்னர் அவர்கள் கனடாவின் பல்வேறு இடங்களில் குடியேறினர்.
இந்தநிலையில் 30வருடங்கள் கழித்து தம்மை காப்பாற்றியவர்களை காண்பதற்காக குறித்த 110 பேர் நியூபௌன்ட்லேன்டுக்கு வந்திருந்தனர்.
இதில் 85 பேர் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பில்லாத, எனினும் காப்பாற்றப்பட்ட தமிழர்களின் உறவினர்களாவர்.
இதில், சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட 4பேர் மாத்திரம் தமது குடும்பத்தினருடன் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நேற்றைய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சருஜன் கனபதிப்பிள்ளை என்ற 29 வயது இளைஞரும் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை அகதி ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது டொரன்டோவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசராக பணியாற்றிவருகிறார்.
இந்தநிலையில் இலங்கை தமிழர்கள் கடந்த 30 வருடங்களின் முன்னர் கனடாவினால்ஏற்றுக்கொள்ளப்பட்டமை முக்கியமான சம்பவம் சருஜன் குறிப்பிட்டார்.
தம்மை காப்பாற்றிய மீனவர்களின் மனிதாபிமானத்தை மெச்சுவதற்காகவே தாம்வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் நேற்று தம்மை காப்பாற்றிய படகின் தலைவரான டெல்ட்டன் என்பரின் வீட்டுக்குசென்றதுடன், அவர்களை கைவிடப்பட்ட படகில் இருந்து கனடாவுக்கு ஏற்றிச்சென்ற கப்பலானலினாட் ஜே கௌலி கப்பலுக்கும் சென்றனர்.
அத்துடன் தாம் இலங்கையில் இருந்து தப்பிவந்த படகு இன்னும் பயன்படுத்தப்படும்ஹொலிரூட் என்ற இடத்துக்கும் அவர்கள் சென்றனர்.