300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டுச் சிறைகளில்!

282

hhhhhhl

வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக சென்றுள்ள இலங்கையர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அல்லது தண்டனை வழங்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாடுகளில் தொழில் புரியும் 18 லட்சம் இலங்கை தொழிலாளர்களில் இவ்வாறு குறிப்பிடத்தக்களவிலானவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்.

இவர்களில் பலரது தகவல்கள் இலங்கை அரசாங்கத்திடமோ அல்லது வெளிவிவகார அமைச்சிடமோ இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் சவூதி அரேபியாவில் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட ரிசான நபீக் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க கடந்த அரசாங்கம் தவறியது.

இந்த நிலையில் தற்போது சவூதியில் கல்லெறிந்து கொலை செய்யப்பட உள்ள இலங்கை பெண் தொடர்பான விடயத்தை காலம் கடந்தே இலங்கை அரசாங்கம் அறிந்து கொண்டது.

இந்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் வரை இலங்கை அரசாங்கம் இந்த பெண் குறித்து எந்த விடயங்களையும் அறிந்திருக்கவில்லை.

இவ்வாறு பலர் சிறைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE