பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?

298
பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். rsz_obesity1-617x416 பிரித்தானியாவில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்கள் பின்பற்றுவதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரையின் அளவு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமானோர் எடுத்துக்கொள்வதால் ஒபிசிட்டி(Obesity) எனப்படும் உடல் பருமன் நோயிற்கு ஆளாகின்றனர். தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாததால், பல நோய்களுக்கு உள்ளாகி ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் பேர் மரணமடைகின்றனர் என பிரித்தானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆரோக்கியத்திற்காக அரசு தன்னுடைய பட்ஜெட்டில் ஒதுக்கும் வருடாந்திர நிதியான 6 பில்லியன் பவுண்டுகள் தொகையிலும் இந்த இறப்பு எண்ணிக்கை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகரிக்கும் இந்த இறப்புக்களை தடுக்கும் விதத்தில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட திரவ உணவுகள் மீது சுமார் 20 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளில் கலோரிகள் அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் உள்ளதால், அவற்றை எடுத்துக்கொள்ளும் பெரும்பாலான பிரித்தானியர்களுக்கு ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் அமைப்பு தலைவரான Sheila Hollins வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, மெக்சிகோ உள்ளிட்ட மாகாணங்களில் உடல் பருமனை கட்டுப்படுத்த சர்க்கரை கலந்த திரவ உணவுகள் மீது வரியை கூட்டியுள்ளதால், அவற்றை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதே முறையை பிரித்தானியாவிலும் பின்பற்றினால், உடல் பருமனால் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையை நிச்சயமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
SHARE