அரசியல் என்பது ஒர் சாக்கடை என்று பலர் கூறுவார்கள் ஆனால் அதே சாக்கடைக்குள் வினைத்திறன் மிக்கவர்களையும், கல்வியாளர்களையும் உள்வாங்குவதன் மூலம் அந்தச் சாக்கடையைக் கூட தெளிந்த நீரோடையாக மாற்றலாம்-மா.றோய் ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்.

355

பாராளுமன்றத் தேர்தல் – 2015

வன்னி தேர்தல் மாவட்டம்

மா.றோய்

ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சுய அறிமுகம்

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நான் ஓர் கண்ணியமான வங்கியாளனாகப் பணிசெய்து சகல வளங்களிலும் ஐஸ்வரியவானாகவும், சமுதாயத்தில் மிக உயர் அந்தஸ்திலும்; வாழ்ந்துவந்;த நான், காலத்தின் கட்டாயம் கருதி மக்கள் சேவையில் மனநிறைவுடன் இறங்குகின்றேன்.

roy 5
இதற்கான காரணம் என்ன? என்பதை எனது அன்பிற்குரிய மக்களுக்கு விபரிக்க விரும்புகின்றேன். யுத்தம் மௌனிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்தும் எமது மக்களுக்கான அடிப்படைச் சமுதாயக் கட்டமைப்புகள் மீளமைக்கப்படுவதற்கு எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான காலகட்டங்களை நாங்கள் சற்று உற்றுநோக்குவோமாயின் அன்றைய மக்கள் குடும்ப மற்றும் சமுதாயக் கட்டமைப்புக்குள் வாழ்ந்து வந்தார்கள்.

இளைஞர்கள் கூட தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து பணிவு, கடவுள் பக்தி, தமது குடும்பத்திலுள்ள பெண் சகோதரர்;களுக்காகத் தம்மை அர்ப்;பணித்து உழைக்கும் தன்மையையும் மற்றும் பெரியோரை, ஆசான்களை கௌரவித்து, மதிக்கும் தன்மைபோன்ற உயரிய நற்பண்புகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் உரிமைக்கானப் போராட்டத்தில் எமது அருமையான இளைஞர்கள், சகோதரர்கள் எல்லோரும் உயிருக்கும் மேலான குடும்ப உறவுகளைவிடத் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்டு பெற்றெடுத்த பெற்றோருக்கேத் தெரியாமல் தமது சுயநலத்தைத் துறந்து, தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டார்கள். யுத்தத்தின் பின்னரான எமது சமூகத்தில் பின்வரும் பாரதூரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
1.குடும்ப கட்டமைப்புகள் எல்லாம் சீர்குலைந்துபோயின . 2.இதன் தொடராக சமுதாயக் கட்டமைப்புகள் அறவே அற்றுப்போயின. 3.தொடர் இடம்பெயர்வுகள், இராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றால் சமூக, பொருளாதார கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டதுடன், இளைஞர்களினதும், பொதுமக்களினதும் எண்ணங்கள், சிந்தனைகள் யாவும் குரூரமாக மாறத்தொடங்கின. மக்களின் சகவாழ்வு கேள்விக்குறியாகமாறியது. 4.கருணை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற கட்டமைப்புக்குள் வாழ்ந்த எம்; தமிழ் மக்கள் யாவரும் இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். கலாசார விழுமியங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டது. 5.வௌ;வேறு விடுதலை இயக்கங்களிடையே முரண்பாடுகள் தோன்றியதால் ஒரே குடும்பச் சகோதரர்கள் பிரிந்துநின்றுச் சகோதர அன்பையே கேள்விக்குறியாக்கினார்கள். 6.இதனை திட்டமிட்டுச் சிங்கள இனவாதிகள் ஊக்குவித்தார்கள்.
இன்று யுத்தம் முடிந்து ஆறு வருடங்களைத் தாண்டியும் இந்தக் கட்டமைப்புகளை சீர் செய்வதற்கு பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எம்மக்களுக்குக் கிடைத்தது வறுமை, கலாச்சாரசீர்கேடு, கல்வி இடைவிலகல், சாந்தமின்மை, விரோதமனப்பாங்கு, பழிவாங்கும் குணம், எதிர்மறை எண்ணங்கள் [NEGATIVE THINKING], தன்னம்பிக்கையின்மை போன்றவற்றோடு விசேட தேவைக்குட்பட்டவர்கள் மற்றும் இளம் விதவைகள் என்று வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இதற்கு மேலாக தமது அவயவங்களைத் தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் 42,000 பேர்கள் வரை இருக்கலாமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சீர்கேடுகளைத் தூரநோக்குடன் முன்னெடுத்துச்செல்ல (VISION AND MISSON) முன்னைய அரசியல்வாதிகளால் இயலவில்லை. இதற்குக் காரணம் யுத்தம் காரணமாக இருந்த அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையும் மற்றும் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்றவகையில் சிந்தனையை மாற்றாத எதிர்ப்பு அரசியலும் காரணமாக இருக்கலாம். இன்றைய அரசியலைப் பொறுத்தமட்டில் மாற்றங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அத்துடன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உருவாக்கப்படுதல் வேண்டும் (ACCEPT THE CHANGES). இதற்கு உதாரணமாக தென் ஆபிரிக்கா தனது அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுத்த விவேகமான நடவடிக்கைகள்.
எனவே எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியாக அரசியல், பொருளாதார, சமூககொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், இம்மாற்றங்களை மக்கள் மயப்படுத்துவதற்கும், அரசியலுக்குள் தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் புதிய முகங்கள், கல்விமான்கள், இளைஞர்கள், பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் மிக முக்கியமாக பல்துறைசார் கல்விமான்கள் கட்டாயமாக அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

இதற்கு முன் உதாரணமாக, வடமாகாண சுகாதார அமைச்சர் திகழ்கின்றார்.வைத்திய கலாநிதியாக வாழ்ந்த இவர் துறைசார் அமைச்சராகிய பின் இன்றுவரை பத்திற்கு மேற்பட்ட வைத்தியசாலைகளையும், 1000இற்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பையும் கடந்த 18 மாதங்களில்; உருவாக்கி வடமாகாணத்திலேயே பாரிய சாதனையொன்றைச் செய்துள்ளார். குறைந்த அதிகாரங்களையும், வளங்களையும் கொண்ட மாகாணசபையொன்றின் சுகாதார அமைச்சர் இவ்வாறான சாதனைகளைச் செய்ததன் மூலம் துறைசார் கல்விமான்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும் என்பதை நிரூபித்திருக்கின்றார்.
இதேபோல் மக்களுக்கு இன்றைய தேவை என அடையாளம் காணப்பட்ட வறுமை, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் அடிப்படையான உட்கட்டுமானங்களுக்கான (வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, விவசாயவிருத்தி) பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
இதைச் செய்வதற்கு கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஒரு வங்கியாளனாக நான் அடைந்த அனுபவங்கள், வங்கியால் எனக்கு வெளிநாட்டில் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் கட்டுக்கோப்புகள், தூரநோக்குச் சிந்தனைகள், திட்டமிட்டுச் செயற்படும் தன்மைகள், மக்களிடையே எனக்குள்ள நன்மதிப்புகள், மும்மொழியிலும் நான் கொண்டுள்ள பாண்டித்தியங்கள் நிச்சயமாகப் பயன்தரும் என்ற குறிக்கோளோடு நான் இந்த அரசியலில் இறங்கியுள்ளேன்.
அரசியல் என்பது ஒர் சாக்கடை என்று பலர் கூறுவார்கள் ஆனால் அதே சாக்கடைக்குள் வினைத்திறன் மிக்கவர்களையும், கல்வியாளர்களையும் உள்வாங்குவதன் மூலம் அந்தச் சாக்கடையைக் கூட தெளிந்த நீரோடையாக மாற்றலாம் என்பதே எனது உறுதியான நம்பிக்கையாகும். அதைவிடுத்து வீரவசனங்கள் பேசுபவர்களும், வெட்டிப்பேச்சு பேசுபவர்களும் இன்றைய மக்களின் தேவைகளுக்கு உகந்தவர்கள் அல்ல.
எனவே காலத்தின் தேவைகருதி மாற்றங்களை உள்வாங்கி, உலக ஒழுங்கோடு ஒத்துப்போய், அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்குத் தமிழ்த்தேசிய சிந்தனையுடனும், போராட்ட குணத்துடனும்; அதேவேளை சமகாலத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதும், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக்கூடியதும், மக்களுக்கான உடனடித்தேவையான சமூக மீள்கட்டுமானத்தில் அக்கறையுள்ள அரசியல்வாதிகளே எமக்குத் தேவை.
30 வருடம் அஹிம்சைப்போராட்டம், 30 வருடம் ஆயுதப்போராட்டமென 60 வருடம் உரிமைக்காகப் போரா டிய நாம் இன்று தொடர்ந்தும் உரிமைகளை வென்றெடுக்க இராஜதந்திரப்போரை நடாத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
வன்னி மாவட்ட வாக்காளப் பெருமக்கள் எனது இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு என்னையும் என்னுடன் போட்டியிடும் எனது சகவேட்பாளர்களையும் ஆதரிக்கவேண்டுமென்று மிக அன்புடன் வேண்டிநிற்கின்றேன்.

நன்றி

மா.றோய் ஜெயக்குமார்

ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்

SHARE