மைத்திரி உரையால் கதி கலங்கிய ஜனக பண்டார தென்னக்கோன்.

150

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு ஜனக பண்டார தென்னக்கோன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

f-16-1

ஜனாதிபதியின் உரை கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டி இது குறித்த கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் தம்புள்ளயில் அமைந்துள்ள தனது இல்லத்தில் அவசர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் உரையினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அல்லது அமைச்சர் என்ற ரீதியில் தாம் இந்தக் கருத்துக்களை வெளியிடவில்லை எனவும், தூய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் இந்த கருத்தை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை தாம் மிகவும் மதிப்பதாகவும், கௌரப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE