தமிழர்களின் உரிமையை வழங்காமல் இனியும் காலம் தாழ்த்த முடியாது! – சிவசக்தி ஆனந்தன்

235

 

கேள்வி: தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்றும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாக கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் கூறுகின்றனவே இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

mp3

எமது இனப்பிரச்சினை என்பது தீரும்வரையில் அது பிரச்சினையாகவே இருக்கும். இதனைத்தான் சிலர் அது ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாக நினைக்கின்றனர். எமது இனத்தின் பிரச்சினையுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பும்இ ஈடுபாடும்இ புரிதலும் இந்த அளவிற்குத்தான் இருக்கின்றது. ஆனால் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பவர்கள்போலும் தம்மால் மட்டுமே பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டமுடியும் என்பது போலவும் அவர்கள் செயற்படுவது வேடிக்கையாக உள்ளதுடன்இ அவர்களை நினைத்து பரிதாபமும் ஏற்படுகின்றது.

எமது இனப்பிரச்சினையானது காலனித்துவ ஆட்சியாளர்களிடம் எமது இறைமையைத் தொலைத்ததிலிருந்தே தொடங்கிவிட்டது. காலனித்துவ ஆட்சியாளர்கள் தாம் இந்நாட்டைவிட்டு வெளியேறும்போது எமது பிரதேசத்தையும் இறைமையையும் எம்மிடம் ஒப்படைக்காமல் சிங்கள இனவாதிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

2009ஆம் ஆண்டு எமது விடுதலைக்கான ஆயுதப்போராட்டமானது இலங்கை அரசினால் பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்பட்டுஇ சர்வதேசத்தைத் தவறாக வழிநடத்திஇ எமக்கு எதிராக சர்வதேச சமூகத்தை உதவிக்கு அழைத்து எமது போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்இ சர்வதேசம் தமது தவறை உணர்ந்துஇ எமக்கு ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. இது எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது.

இன்று சர்வதேசம் இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள்இ யுத்தக்குற்றங்கள் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் மக்கட்தொகையில் குறைந்தவர்களாக இருப்பினும் இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காத்திரமான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இவை எமது ஆயுதப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

சர்வதேச சமூகத்தின் இந்த சிறிய ஆதரவைத் தக்கவைத்துஇ எமது உரிமைகள் எமக்கு வேண்டும் என்பதையும் அதனைத் தட்டிப்பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தி அதனை அடைவதற்கான வழிமுறைகளை வகுத்து செயற்படுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டால் இன்று வேறு எவரால் முடியும்?

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபுரிபவர்களால்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி இவ்வாறான கேள்வியைக் கேட்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? எமது மக்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும். மக்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களும் ஏதாவது சொல்லத்தானே வேண்டும். பாவம் அவர்கள் எதையாவது சொல்லட்டும். வேண்டுமானால் அவர்களுக்காக நாம் பரிதாபப்படலாம்.

கேள்வி: நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என நீங்கள் கருதுகிறீர்கள்?

தங்களது கேள்வியே இத்தேர்தலில் ஏதோ முக்கியத்துவம் இருப்பதை உணர்த்துகின்றது. பாராளுமன்றத்திற்கான ஆயுட்காலம் இன்னமும் ஓராண்டு இருக்கும் நிலையில்இ இந்தத் தேர்தல் அவசரஅவசரமாக போதிய கால அவகாசமின்றி நடத்தப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து சுமார் எட்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனிதவுரிமை மாநாட்டை மையமாக வைத்தே இந்தத் தேர்தல் நடைபெறுவதாகவும் கொள்ளமுடியும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடவிருந்த ஐ.நாவின் அறிக்கையானது புதிய ஜனாதிபதி மற்றும் இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் செப்ரெம்பர்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தமது இடைக்கால அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளடக்க முயற்சி எடுத்துஇ அது தோல்வியடைந்த நிலையில்இ நிறைவேற்று அதிகார சபை ஒன்றை உருவாக்கி அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டனர். ஆயினும்இ அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வைக்கப்பட்ட பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்படாமலேயே இருந்தன.

அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட போதிலும் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு கிடைக்காது என்ற நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டது. ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கு இலங்கை ஜனாதிபதி செப்ரெம்பரில் புதிய அரசாங்கம் அமைந்து விடும் அது ஐ.நாவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் என்று தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தைப் பொறுத்தவரையில்இ வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தின்மீது முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாது. மக்களின் இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நன்குணர்ந்துள்ளது. எனவேதான்இ தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்துஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களைக் குறைத்துஇ அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவை இழந்துள்ளது என்று காட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் முனைந்து எமது பிரதேசங்களில் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

ஆகவேஇ இத் தேர்தலானது எமது மக்களின் இறைமையைக் காத்துக்கொள்வதற்கான தேர்தலாகும். எமது மக்கள் எத்தகைய சலுகைகளுக்கும் பின்னால் சென்றவர்களல்ல. சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் சூழ்ச்சியையும்இ அவற்றின் நிகழ்ச்சி நிரலையும் நன்கறிந்தவர்கள். எனவே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வேறு யாருக்கும் தமது வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

கேள்வி: நடைபெறவுள்ள தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைப் பறிப்பதற்கு யாரும் இல்லை. எமது மக்கள் எப்பொழுதும் கொள்கையின்பால் கவரப்பட்டுஇ குறிக்கோளில் பற்றுறுதியுடன் இருப்பவர்கள் எனவே எத்தனை கட்சிகள் வந்தாலும் எந்த வடிவத்தில் வந்தாலும் எதனை வாறிவழங்கினாலும் எத்தகைய வாக்குறுதிகளை அளித்தாலும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். எமது வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றது.

கேள்வி: கூட்டமைப்பின் சமஸ்டி தொடர்பில் தென்னிலங்கை கொதித்தெழும்பியிருக்கிறதே. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமது அரசியல் இருப்பிற்கே ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இம்மாதிரி கொதித்துப்போய் ஆர்ப்பரிப்பது ஒன்றும் இந்நாட்டில் புதிதல்ல.

இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஏதோ இந்த முழு நாட்டையும் கைப்பற்றிவிடுவார்கள் அதன் பின்னர் தங்களின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்பது போன்ற தோற்றத்தை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் விதைத்துஇ அவர்களை அறியாமையைப் பயன்படுத்திஇ அவர்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பி விட்டுஇ குறிப்பிட்ட கால இடைவெளியில் கலவரம் என்ற பெயரில் பல்வேறு காரணங்களுக்காக இந்நாட்டின் தலைநகரான கொழும்பு மற்றும் இதர பகுதிகளில் இருந்த தமிழர்கள்மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை ஏவிவிட்டனர்.

இன்று சர்வதேசம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்தவர்களாய்இ ஐக்கிய இலங்கைக்குள் எமது தாயகப் பிரதேசத்தில் எமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமக்கான ஒரு சுயாட்சியை அமைப்பதையே தாங்கிக்கொள்ள முடியாதவர்களாய் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். சிலரை பலகாலம் ஏமாற்றலாம் பலரை சிலகாலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை சிங்கள பௌத்த இனவாத சக்திகள் புரிந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது. அவர்கள் தமிழர்களின் உரிமையை வழங்காமல் இனியும் காலம் தாழ்த்த முடியாது. இத்தகைய சிறுசிறு சலப்புகள் இருக்கத்தான் செய்யும்.

எமது பிரதேசத்தில் எமக்கான சுயாட்சியை அடைவோம் என்று சொன்னவுடனேயே சிங்கள பௌத்த இனவாதிகள் கொந்தளிக்கின்றார்கள் என்றால் அவர்களது மனநிலை எத்தகைய பிற்போக்குத்தனமானது என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. காலம் செல்லச் செல்ல பக்குவம் வளர்வதற்கு பதிலாகஇ ஒரு காலத்தில் முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்த இடதுசாரிக் கொள்கையாளர்கள் சிலர்கூட இன்று இனவாதிகளாக மாறியிருப்பதுதான் எமக்குப் புரியாத புதிராக இருக்கின்றது.

கேள்வி: தேர்தலுக்கு பின்னர் அமையவுள்ள அரசாங்கமும் தமிழர்களுடைய பிரச்சினையை முன்னைய அரசு போன்று கையாளும் பட்சத்தில் கூட்டமைப்பின் அடுத்த தெரிவு என்னவாக அமையும்?

இந்தக் கேள்வி அனுமானத்தின் பேரில் கேட்கப்படுகின்ற கேள்வி. ஆனாலும் நல்ல கேள்வி. இதுவரை காலமும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எத்தகைய சமிக்ஞையையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் காண்பிக்கவில்லை. ஆனால் தமிழ்; தலைமை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியிலும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இருப்பினும் அவை பயனற்றுப் போயின. ஆகவேஇ இத்தேர்தலிலும் நாங்கள் அவர்களிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். எமக்காக நாமே போராடவேண்டும். இந்தத் தேர்தல் அதற்கான களத்தினை அமைத்துக்கொடுக்கும் என்றே நாம் நம்புகின்றோம்.

எந்தவொரு போராட்டமும் வெற்றிபெற வேண்டுமாயின்இ அதற்கான அமைப்பு கட்டுக்கோப்பானதாகவும் பற்றுறுதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில்இ பற்றுறுதியில் தளர்வில்லை. ஆனால் அமைப்பு வடிவத்தில் குறைபாடுகள் உள்ளன. இதனைச் சரிசெய்து கட்டுக்கோப்பான கட்சியாக ஒரு அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் நிர்வாக மட்டங்களையும் கொண்டதாகவும் சட்டவலுவுடனான அமைப்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனை எமது மக்கள் நன்குணர்ந்து செயற்படவேண்டியதும் இப்பொழுதைய தேவையாக உள்ளது.

கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் முன் நீங்கள் வைக்கவுள்ள கோரிக்கை என்ன?

பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக எமது பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவது சற்று தாமதாகவே இடம்பெறும். ஆட்சிசெய்பவர்கள் ஒரு உளவியல்ரீதியான போராட்டமாக எம்மை சலிப்படையச் செய்வதற்காக அடிக்கடி தேர்தல்களை நடத்துவதற்கு முயற்சிப்பார்கள். எமது பற்றுறுதியைக் குலைப்பதற்குப் பலவழிகளிலும் முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு எமது மக்கள் தற்போதுள்ள ஒரேவழியான ஜனநாயக வழிமுறையில் நம்பிக்கை வைத்து எத்தனைமுறை கேட்டாலும் எமது எந்தவழிகளில் கேட்டாலும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை என்ற பதிலையே தங்களது வாக்குப் பலத்தால் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி: போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கழிந்துவிட்டன. இந்நிலையில் வன்னி மாவட்டத்தினுடைய தற்போதைய நிலைவரம் எவ்வாறு உள்ளது? என்னனென்ன தேவைகள் அங்கு காணப்படுகின்றன?

எமது பிரதேசத்தின் ஏனைய பகுதிகளைப் போன்றே வன்னிமாவட்டத்திலும் இன்னமும் மீள்குடியேற்றம் முழுமைபெறவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை இன்னமும் சாத்தியப்படாமலேயே உள்ளது. காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஆட்சி மாறியபோதிலும் இந்த நிலைமையில் மாற்றமில்லாத நிலை தொடர்கிறது. மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டம் முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியின்போது குரல்கொடுத்ததன் பின்னர் ஓரளவு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. காயமுற்று அடுத்தவர்களின் உதவியுடன் வாழ்கின்றவர்களின் விசேட வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் நிரந்தர வாழ்வாரத்தைக் கட்டியெழுப்ப உதவிகள் செய்ய வேண்டியுள்ளது. அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டியுள்ளது. இவர்களில் பணி செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும்படி குரல்கொடுக்க வேண்டியுள்ளது.
யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும்இ எமது பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் இதுவரை அக்கறையின்றியே இருக்கின்றது. குறைந்தபட்சம் அதற்கான முன்னெடுப்புகளைக்கூட மேற்கொள்ளாமல் உள்ளமை கவலையளிக்கின்றது.

கேள்வி: அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து காணாமல் போனோர் தொடர்பில் மற்றுமொரு ஆணைக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

கடந்த செவ்வாய்க்கிழமை (27.07.2015) அன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் திரு.அங்கஜனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றுஇ அவருடன் கோயில் பூசைகளிலும் கலந்துகொண்டு பின்னர் அவரது வீட்டில் மக்களையும் சந்தித்துள்ளார்.

இங்கு முக்கியமான ஒரு கேள்வி எழுகின்றது. தான் எந்தக் கட்சிக்கும் வேட்பாளருக்கும் ஆதரவாகச் செயற்படப்போவதில்லை நடுநிலையைப் பேணப்போகிறேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தனது கட்சியின் வேட்பாளரின் அழைப்பை ஏற்றுச் சென்றிருக்கிறார். இங்கு அவர் சென்றதைவிடவும் அங்கு பேசிய விடயங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதுடன்இ எம்மைக் கவலையடையவும் செய்துள்ளது.
திரு.அங்கஜன் வீட்டில் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்த ஜனாதிபதி அவர்கள்இ தேர்தல் முடிவடைந்தவுடன் மற்றொரு ஆணைக்குழுவை தனது நேரடி மேற்பார்வையில் அமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட காணாமல் போகச் செய்யப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த ஜனாபதியின் உத்தரவு மூலம் நீடிக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடாத்தப்பட்டு அந்தக்குழு தனது இடைக்கால அறிக்கையையும் ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர்இ இப்பொழுது மீண்டும் ஒரு ஆணைக்குழுவை அமைக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் ஏற்கனவே அமைத்த ஆணைக்குழுவிற்கும் அதன் அறிக்கைக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

ஏற்கனவே பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணையைக் கோருவதில் நியாயம் இருக்கின்றது என்று ஒப்புக்கொண்டுள்ள நிலையில்இ ஜனாதிபதியின் இந்தக் கூற்றும் அதற்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.
இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாதிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தமிழ் வேட்பாளர்களுக்கு இப்பொழுது திடீரென்று தோன்றியுள்ள கரிசனைக்கும் ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துச் சென்றுள்ளார்.

ஆகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நன்கு நிரூபித்துவிட்டார்கள். எமது மக்களில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களிக்க நினைத்திருந்தாலும் அவர்கள் மனம்மாறிஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவரும் காலைவேளையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்களது வாக்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் உங்களது வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு அருகில் வாக்களித்து உங்களது விருப்பமானவர்களை அவர்களது இலக்கத்திற்கு மேலே புள்ளடியிட்டு ஆதரவினைத் தெரிவியுங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மட்டுமே தமிழ் மக்களின் விடிவிற்கான திறவுகோலாக அமையும்.

நன்றி,

தினக்குரல் (அரசியல் களரி)
02.08.2015

SHARE