முன்னணி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிப்பது தற்போது ‘பேஷன்’ ஆகி இருக்கிறது. சமீபத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக வெளியானது.
பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்த இந்த படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. இப்போது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை இந்தி திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். இதற்கு சானியா மிர்சா ‘ஓகே’ சொல்லிவிட்டார். இந்த படத்தை பாராகான் இயக்குகிறார். சானியா மிர்சாவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான, சுவாரஷ்யமான சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
சானியா படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவின் தங்கை பிரணதி சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன