383

 

 

இன்று நடைபெறவுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

3,40,926 பரீட்சார்த்திகள் இம்முறை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிமூலங்களிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.

பரீட்சையை நடத்துவதற்காக நாடு முழுவதும் சுமார் 26,000 இற்கும் அதிகமான செயற்குழுவினரை ஈடுபடுத்தியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதுதவிர, பரீட்சை கண்காணிப்பிற்காக மாகாண மட்டத்திலும், பரீட்சைகள் திணைக்கள மட்டத்திலும் சுமார் 500 ற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09.30 தொடக்கம் 10.15 வரை மற்றும் 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையிலும் இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

 

அந்த வகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் ஏனைய மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.

 

(க.கிஷாந்தன்)

SHARE