194
2-வது புதிய பந்தில் சரிந்து விட்டோம்: இந்தியாவை 300-க்குள் மடக்குவது அவசியம்- திரிமானே
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 306 ரன்னில் ஆல் அவுட் ஆனது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. திரிமானே 28 ரன்னுடனும், மேத்யூஸ் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளை வரை இலங்கை அணி மேலும் விக்கெட் ஏதும் இழக்காமல் 224 ரன்கள் எடுத்திருந்தது. திரிமானே 57 ரன்னுடனும், மேத்யூஸ் 72 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்தியா புதிய பந்தை எடுத்தது. புதிய பந்து வீச்சில் மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு மேலும் 82 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் இந்தியா 87 ரன்கள் முன்னிலைப் பெற்றது. தற்போது 2-வது இன்னிங்சில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து நல்ல நிலைமையில் உள்ளது. இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் 62 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் துணை கேப்டன் திரிமானே இப்போட்டி குறித்து கூறுகையில் ‘‘இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருந்தது. இந்தியா 2-வது புதிய பந்தை எடுத்தவுடன் நாங்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நாங்கள் குறைந்தது 350 ரன்களாவது எடுத்துவிட விரும்பினோம்.
தற்போது நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவதுதான் எங்கள் நோக்கம். நாளை பந்து அதிக அளவு திரும்புவதால் (Turn) இந்தியாவை 300 ரன்னுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என நம்புகிறோம். இன்று முதல் அரைமணி நேரத்திற்குப் பிறகு ஆடுகளம் மிகவும் பிளாட்டாக (பேட்டிங்குக்கு சாதகம்) இருந்தது. ஆனால், மிஸ்ரா மற்றும் அஸ்வின் மிகச்சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்

SHARE