35,000 அடி உயரத்தில் பிறந்த பெண் குழந்தை: கனடிய பிரஜை ஆவதற்கான அதிஷ்டம்

409
எயர் கனடா விமானம் பசிபிக் சமுத்திரத்தில் 35,000 அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.கல்கரியில் இருந்து டோக்கியோ சென்று கொண்டிருந்த எயர் கனடா விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விமானம் பசிபிக் சமுத்திரத்தின் மேல் பறந்துகொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, விமான அதிகாரிகள் விமான பணியாளர்களையும் மருத்துவர்களையும் பிரசவத்துக்கு உதவுமாறு தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு குளோயி என்று பெயர் வைத்துள்ளனர்.

பிரசவித்த பெண்ணை மருத்துவ ஊழியர்கள் ஸ்ரெட்சரில் வைத்து விமானத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

விமானம் ஜப்பான் நறிட்டா சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவ குழு ஒன்று அவர்களை வரவேற்றுள்ளது.

இந்த விமான பயணத்தில் குழந்தையின் தந்தையும் இருந்தார். அவர் கூறுகையில், இது முற்றிலும் எதிர்பாராத விதமாக நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பெற்றோரின் அடையாளங்கள் மற்றும் தேசிய இனங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்த பெண் குழந்தை குளோயிக்கு கனடிய பிரஜை ஆவதற்கான அதிஷ்டம் கிடைத்துள்ளது.

இவளின் பெற்றோர் வேறு நாட்டில் பிறந்தவர்களாக இருந்தாலும் பிறந்த விமானம் கனடாவில் பதிவு செய்யப்பட்டதால் குளொயியை ஒரு கனடிய பிரசையாக பிரகடனபடுத்த விண்ணப்பிக்கலாம் என வழக்கறிஞர் கோல்ட்தொரப் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடிய வான்வெளியில் பிறக்கும் குழந்தைகள் பெற்றோரை பொருட்படுத்தாமல் தானாகவே கனடிய குடியுரிமையாளராக கருதப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE