நடிகர் விஷால் நடித்த பாயும்புலி படம் வருகிற 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், திருச்சி பகுதி சினிமா விநியோகஸ்தர் சிங்காரவேலன், பாயும் புலி படத்தை திரையிட விட மாட்டேன் என்று கூறிவருகிறாராம்.
ரூ. 50 லட்சம் கேட்பதோடு, தியேட்டர் உரிமையாளர்களையும் மிரட்டி வருவதாக கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன், கே.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டவர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
பின்னர் பேசிய வேந்தர் மூவிஸ் மதன், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ‘பாயும் புலி’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்.
உடனே உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.