மும்பை:நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிட வேண்டாம். இது வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் சண்டை தான். நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் அன்பின் அடையாளமாக ஆராத்யா என்ற மகள் உள்ளார். மகளுக்காக இத்தனை ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. ஆராத்யா வளர்ந்துவிட்டதை அடுத்து அவர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார். அவர் ஜஸ்பா படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.