296
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனை நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ்.மாவட்ட மீனவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர்.

இந்நிலையில். இதனை கண்டித்து இன்றைய தினம் காலை 7.40 மணிக்கு யாழ்.கட்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளரிடம் மகஜர் கையளிப்புடன் தொடங்கிய ஆர்ப்பாட்டம்,

யாழ்.நகர் வழியாக நகர்ந்து யாழ்.மாவட்டச் செயலகத்தை அடைந்து மாவட்டச் செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பாக முழுமையாக தாம் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்த மாவட்டச் செயலர், தன்னிடம் கையளிக்கப்பட்ட மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நகர்ந்து இந்திய துணை தூதுவர் காரியாலயத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்திய துணை தூதுவர் எ.நட்ராஜன் மகஜர் பெற்றுக் கொண்டதுடன் மகஜரை தாம் இந்திய மத்திய அரசின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய துணைதூதுவருடன் பேசிய மீனவர்கள் இப்போது அமைதியான முறையாக நடத்தும் ஆர்ப்பாட்டம் அடுத்த கட்டம் கடுமையான போராட்டமாக நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காலை 9.46 மணிக்கு நிறைவுக்கு வந்தது.

SHARE