39 பந்தில் 65 ரன்! முதல் அரைசதத்தை தெறிக்க விட்ட இலங்கை வீரர்

43

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் முதல் அரைசதத்தினை பதிவு செய்தார்.

இமாலய இலக்கு
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் குவித்தது. குர்பாஸ் 70 ஓட்டங்கள் விளாசினார்.

இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பதும் நிசங்கா 30 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசினார்.

கமிந்து மெண்டிஸ் முதல் அரைசதம்
மறுமுனையில் வெற்றிக்காக போராடிய கமிந்து மெண்டிஸ் அதிரடியாக முதல் அரைசதம் அடித்தார். அவர் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசியபோதும், இலங்கை அணி 3 ஓட்டங்களில் வெற்றியை தவறவிட்டது.

கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என வென்றது.

ஆட்டநாயகன் விருதை குர்பாஸும், தொடர் நாயகன் விருதை வணிந்து ஹசரங்காவும் பெற்றனர்.

SHARE