பொதுபலசேனவுடன் மோத துப்பில்லாத அமைச்சர் றிசாட் வவுனியா பாரதிபுர மக்களை காணிகளில் இருந்து வெளியேறக் கூறுவது புள்ளப்பூச்சி அடிக்கும் செயலாகும் -பா உ.சிவசக்திஆனந்தன்

466

 

மிகவும் வறிய நிலையில் உள்ள ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர். குறித்த கிராமத்திலுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவருடைய கையாட்களும் கடந்தகாலங்களிலும் செயற்பட்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினரின் துணையுடன் பாகிஸ்தான் நாட்டவர்களுடன் பாரதிபுரம் கிராமத்துக்குச் சென்ற றிசாட் பதியுதீன் அந்த மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் தாம் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் வனப்பாதுகாப்புத் தினைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் மக்கள் குடியேறியுள்ளதாகவும், அக் காணிகளுக்கான உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏன் வவுனியா பாரதிபுர கிராமமக்கள் அவ்விடத்தில் வசிக்கக்கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதனோடு பாகிஸ்தான் நிறுவனமொன்றினால் அப்பிரதேசத்தில் அமைக்கப்படவிருப்பதாகவும் பாகிஸ்தான் நாட்டினைச்சேரந்த இருவர் அமைச்சர் ரிஷாட் பதியுதினுடன் வந்திருந்தாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். இப்பிரதேசத்தில் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள போராடியே தீர்வோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள ,ந்நிலையில் ,ப்பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கையாளவேண்டும். பொதுபலசேனா அமைப்பினர் அவர்களுடைய பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை குடியேற்றி அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திய சம்பவங்களையும் நினைத்துப்பார்க்கவேண்டும். அவர்களுடன் ,ணக்கப்பாட்டைக் கண்டுகொள்ளாத நீங்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்கின்ற பொதுமக்களை வெளியேறப் பணிப்பது என்பது தமிழ்ச்சமுதாயத்திற்கு விளைவிக்கும் துரோகச்செயலாகும் என்று தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் அது பயனளிக்கவில்லை.  (இணைப்பு 01)

SHARE