4 பேரை கொன்று விமானத்தை திருடிய நபர்: விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா

308
அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்த போவர்(67) என்பவர் கடந்த 1983 ஆம் ஆண்டு, சிறிய ரக விமானம் ஒன்றை வாங்குவதற்காக நபர் ஒருவரிடம் பேரம் பேசியுள்ளார்.

ஆனால், இவர் கேட்ட விலைக்கு விமானத்தை தர உரிமையாளர் தர மறுத்ததால், விமான உரிமையாளர் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, விமானத்தை திருடிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் போவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து போவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த 31 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்ததையடுத்து, அவருக்கு சமீபத்தில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

SHARE