4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய ஒரே ஒரு தோட்டா. நடந்தது என்ன?

204

isis-720x480

சிரியாவில் பிரித்தானிய சிறப்புப்படை ராணுவ வீரர் (Sniper) ஒருவர் ஒரே ஒரு தோட்டாவை பயன்படுத்தி 4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

சிரியாவில் பிரித்தானிய அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

இதில் அங்குள்ள ராணுவத்தினருக்கு உதவியாக பிரித்தானிய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையும் களமிறங்கியுள்ளது. British Special Air Service (SAS) என்று அறியப்படும் அவர்களில் ஒரு வீரர் ஒரே ஒரு தோட்டாவால் 4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்தின்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள 4 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை உயிருடன் கொளுத்தி படுகொலை செய்ய திட்டமிட்டுவருவதை ராணுவத்தினர் தெரிந்து கொண்டுள்ளனர்.

சம்பவம் நடைபெறும் பகுதிக்கு 1500 மீற்றர் தொலைவில் இருந்தபடியே இந்த சம்பவங்களை குறிப்பிட்ட SAS ராணுவ வீரருடன் இருந்து நோட்டமிட்டு வந்துள்ளனர்.

அந்த பிணைக்கைதிகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்த அந்த தீவிரவாதிகள் ஆயத்தமானபோது அவர்கள் பயன்படுத்தி Flamethrower எனும் துப்பாக்கியின் எரிபொருள் நிரப்பும் பகுதியில் பிரித்தானிய ராணுவ வீரர் குறிபார்த்து சுட்டுள்ளார்.

இதில் அந்த Flamethrower வெடித்துச் சிதறியதில் குறிப்பிட்ட 4 ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் உடம்பெக்கும் நெருப்பு பற்றியுள்ளது.

இச்சம்பவத்தில் அந்த 4 பேரும் உடல் கருகி பலியானதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அந்த அப்பாவி பிணைக்கைதிகளும் அங்கிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே குறிப்பிட்ட Sniper குறித்த தகவல்கள் எதுவும் வெளியிட ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. ஆனால் அவர் சிரியாவில் பெருமளவு ஐ.எஸ் தீவிரவாதிகளை மறைந்திருந்து தாக்கி பலிவாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE